பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இந்த பூவைப் பற்றி/ பூ அறிந்த சிறு சிறு குறிப்புகள்...... துளிர்விட்டுத் திரியும் இலைகளின் வாசனைகள்........



எப்படி கவிதை எழுதுகிறேன் ?

முதலில் நோட்பேடில்தான் எழுதுவேன். அப்பாவோ அம்மாவோ வந்துவிட்டால் 
உடனே அதை  மூடிவிடுவேன்... அவ்வளவு எளிதில் தெரியாமல் போய்விடும்..  என்னுடைய அறையில் கணிணி இருப்பதால் பிரச்சனையில்லை.. கதவு திறக்கும்போதே அறிந்துவிடுவேன். அம்மாவும் அவ்வளவு சீக்கிரம் வரமாட்டாள். அப்பா இரவுதான் வருவார்.. சில சமயங்களில் யாருக்கும் தெரியாமல் இரவு கண் விழித்து இணையத்தில் உலாவுவேன்...

எனக்கு கவிதை எழுதுவதில்  எந்த சிரமமும் இல்லை. உடனடியாக படபட என்று எழுதி நோட்பேடில் சேமித்து வைத்துவிடுவேன்... கவிதையில் தவறு இருக்கிறதா 
என்று பார்க்கமாட்டேன். ஆனால் அவ்வளவு சீக்கிரம் தவறு நேர வாய்ப்பில்லை,

என் அறையில் புத்தகக் களஞ்சியமே இருக்கிறது.. அப்பாதான் புத்தகப் பிரியர்.. எனக்கும் ஒட்டிக்கொண்டது. நிறைய புத்தகங்கள் படிப்பேன்..
எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான்..... படிப்பு முடியட்டும் ஒரு கலக்கு கலக்கிவிடலாம்

கொய்தது பிச்சி @ 8:57 AM, ,




என் விபரங்கள்

நான், பிரபா!
BSc CT படிக்கும் மாணவி...
வசிப்பிடம் ஈரோடு.

அவ்வப்போது தோன்றும் கவிதைகளை பெற்றவர்களுக்கு பயந்து எழுதாமல் போனேன்!! இன்று இணையம் வந்ததும் அவர்களுக்குத் தெரியாமல் எழுதுகிறேன்..
என்றாவது தெரிந்துவிட்டால், அவ்வளவுதான்...........

கொய்தது பிச்சி @ 8:15 PM, ,